புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (16.10.2024) விடுமுறை அறிவித்தது புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளுக்கு நாளை புதன்கிழமை (16.10.2024) விடுமுறை அளிக்கப்படுகிறது.