×

சென்னையில் 6 செ.மீ. மழை மட்டுமே பெய்துள்ளதாக பரவும் தகவல் தவறானது: உண்மை சரிபார்ப்பகம் தகவல்

சென்னை: சென்னையில் 6 செ.மீ. மழை மட்டுமே பெய்துள்ளதாக பரவும் தகவல் தவறானது என உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்டும், நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை நகரம் முழுவதும் பரவலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

வேளச்சேரி, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி., நகர், கிண்டி, சைதை, தேனாம்பேட்டை, தி.நகர், அமைந்தகரை, ஷெனாய் நகர், மயிலாப்பூர், மந்தைவெளி என பல பகுதிகளில் மழை ஓயவில்லை. தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலைகளில் தேங்கும் நீரை, மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக அகற்றும் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். சென்னையின் பல்வேறு பகுதிகளில் சராசரியாக 8 செ.மீ.க்கு மேல் கனமழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் 6 செ.மீ. மழை மட்டுமே பெய்துள்ளதாக பரவும் தகவல் தவறானது என உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை எண்ணூரில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மணலி, திரு.வி.க.நகர், பொன்னேரி, ராயபுரம், கொளத்தூரில் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கோடம்பாக்கம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டையில் தலா 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் 6 செ.மீ. மழை மட்டுமே பெய்துள்ளதாக பரவும் தகவல் தவறானது: உண்மை சரிபார்ப்பகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Indian Meteorological Department ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் அதிதீவிர கனமழை...