தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் தூய்மைப்பணி

 

தூத்துக்குடி,அக்.14: தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியை கனிமொழி எம்பி,அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொட ங்கி வைத்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் நடைபெற்று வரும் நெய்தல் திருவிழாவில் ஒரு பகுதியாக தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதிகளை தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை இணைந்து தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. இந்த கடற்கரை தூய்மைப்படுத்தும் பணிகளை பாராளுமன்ற திமுக குழு தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

இதில், கலெக்டர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் திமுக மாநகரசெயலாளர் ஆனந்த சேகரன், துணைமேயர் ஜெனிடா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, நிர்மல்ராஜ், சுரேஷ்குமார், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், வட்டச்செயலாளர் கதிரேசன், மாநகர மீனவர் அணி அமைப்பாளர் டேனியல், கவுன்சிலர்கள், மேயர் நேர்முக உதவியாளர்கள் ஜெஸ்பர், பிரபாகர், ரமேஷ் மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.

The post தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் தூய்மைப்பணி appeared first on Dinakaran.

Related Stories: