நவராத்திரி விழாவில் அம்பு விடுதல் நிகழ்ச்சி

 

ராமநாதபுரம், அக்.14: ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானம் அரண்மனை ராமலிங்க விலாசம் மற்றும் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் தசரா விழா கடந்த 10 நாட்களுக்கு முன் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கோயிலில் கொலு பொம்மைகள் வைத்து கொண்டாடப்பட்டு வந்தது. கடந்த பத்து நாட்களும் சமஸ்தானம் சேதுபதி ராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார் தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆன்மீக சொற்பொழிவு, மஹாபிஷேகம், திருவிளக்கு பூஜை, பரதநாட்டிய நிகழ்ச்சி, இன்னிசை கச்சேரி, பல்சுவை நிகழ்ச்சி, பட்டிமன்றம், பொம்மலாட்டம் என பத்து நாட்களும் கோலாகலமாக நடைபெற்றது. 10ம் நாள், விஜய தசமி அன்று அம்பு எய்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்வினை மகாநோன்பு என அழைப்பர். இதனைத் தொடர்ந்து கேணிக்கரையிலுள்ள மகர்நோன்பு திடலில் இந்நிகழ்ச்சி நேற்று அதிகாலை 12. மணியளவில் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற கோயில்களில் உள்ள 26 சாமிகள் எல்லாம் ஊரைச்சுற்றி அரண்மனை வழியாக வந்து பின் மகர்நோன்பு திடலை சென்றடைந்தது. கடைசியாக ராஜராஜேஸ்வரி அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மகிஷாசூரமர்த்தினி திருக்கோலத்தில் புறப்பட்டு மகர்நோன்பு திடலுக்கு வந்தவுடன், அம்பு எய்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.தலைமை குருக்கள் எய்தும் அம்பை பார்க்க ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். அம்பு எய்தல் மூலம் நாட்டில் மழை பொழிந்து ஊர் செழிக்கும் என்பது ஐதீகம். குருக்கள் விட்ட அம்பை எடுக்க மக்கள் போட்டி போட்டு எடுத்துச் சென்றனர். அந்த அம்பினை எடுத்து வீட்டில் வைத்தால் வீட்டில் பொன் பெருகும் என்பது ஐதீகம். அம்பாளை வழிபடுவதால் திருமண தடை, குழந்தையின்மை போன்ற தடைகள் நீங்கும். நினைத்தக் காரியம் கைக்கூடும். இதனால் தான் சேதுபதி மன்னர்கள் அம்பாளை வெற்றி தேவதையாக வழிபட்டனர்.

 

The post நவராத்திரி விழாவில் அம்பு விடுதல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: