வலங்கைமான் அரசு ஆண்கள் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கல்

 

வலங்கைமான், அக். 13: வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் 89 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் நாவளவன் தலைமை தாங்கினார்.

பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவ ஆலோசகர் சிவனேசன் பொருளாளர் ராஜேஷ் பேரூராட்சி மன்ற துணை தலைவர் தனித்தமிழ்மாறன் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வம் பதினோராம் வகுப்பு பயிலும் 89 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

The post வலங்கைமான் அரசு ஆண்கள் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: