அதன்படி, இ.சி.ஆர் சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ. 487 கோடி செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. அந்தவகையில், 5 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மாநாட்டு கூடம் ரூ. 102 கோடியிலும், 10 ஆயிரம் நபர்கள் பார்வையிடும் வசதிகொண்ட கண்காட்சி அரங்கம் ரூ. 172 கோடியிலும், கூட்ட அரங்குகள், அரங்கம் ஆகிய வசதிகள் ரூ.108 கோடியிலும் அமையவுள்ளது.
திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், 10 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்த வசதிகள் மேற்கொள்ளபடவுள்ளது. மேலும் வெளிப்புற பணிகளான சாலை வசதி, சுற்றுச்சுவர் வசதி, நுழைவு வாயில் உள்ளிட்டவைகள் ஆகிய பணிகள் ரூ. 105 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த பணிகள் என்பது வரும் 2025ம் ஆண்டு இறுதி அல்லது 2026 தொடக்கத்தில் முடிக்க பொதுப்பபணித்துறை திட்டம் தீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post முட்டுக்காடு பகுதியில் ரூ.487 கோடியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்: தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது: கட்டுமான பணிகளை 15 மாதங்களில் முடிக்க திட்டம் appeared first on Dinakaran.