விமான நிலையத்திற்கு வெளியே 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினியும் விமான நிலையம் விரைந்தார். எரிபொருளை குறைத்து விமானத்தை எமர்ஜெர்ன்சி லேண்டிங் செய்ய குறைந்தது 4 மணி நேரம் ஆகலாம் என்றும், எமர்ஜென்சி லேண்டிங்கின்போது விமானம் சற்று அதிர்வுகளுடன் தரையிறங்கும் என்றும் விமானப்படை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விமானத்தின் சக்கரம் உள்ளே செல்லாததால், விமானத்தை மீண்டும் தரையிறக்க விமானிகள் முயற்சி; விமானத்தின் எரிபொருள் குறைந்த பிறகு விமானத்தை தரையிறக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தீப்பற்றுவதை தவிர்க்க எரிபொருள் குறைந்த பிறகு விமானத்தை தரையிறக்க திட்டம்; முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி விமான நிலையத்தில் 18 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன; திருச்சி விமான நிலையத்திற்கு மருத்துவக் குழு விரைகிறது.
The post திருச்சியில் பரபரப்பு….! 2 மணி நேரமாக வானத்தில் வட்டமடிக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்: தயார் நிலையில் 18 ஆம்புலன்ஸ்கள் appeared first on Dinakaran.