சாணார்பட்டி கோம்பைபட்டியில் ரேஷன் கடை திறப்பு விழா

 

கோபால்பட்டி, அக். 11: சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி தலைமை வகித்தார். கோட்டாச்சியர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.கிழக்கு தாசில்தார் மீனா தேவி வரவேற்றார். இவ்விழாவில் மொத்தம் 855 பயனாளிகளுக்கு ரூ.43 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கந்தசாமி, தமிழரசி கார்திகை சாமி, துணை தலைவர் ராசு, ஊராட்சி செயலாளர் ஜான் கென்னடி மற்றும் அரசு அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோம்பைபட்டி ஊராட்சி அய்யாபட்டியில் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறந்து வைக்கப்பட்டது.

The post சாணார்பட்டி கோம்பைபட்டியில் ரேஷன் கடை திறப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: