×

நவம்பர் 6-ம் தேதி செஞ்சிலுவை சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்

 

ஊட்டி, அக். 11: இந்திய செஞ்சிலுவை சங்க நீலகிரி மாவட்ட கிளையின் பொதுக்குழு கூட்டம் வரும் நவம்பர் 6ம் தேதி ஊட்டியில் நடக்கிறது. இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நீலகிரி மாவட்ட கிளையின் பொதுக்குழு கூட்டம் நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் நவம்பர் மாதம் 6ம் தேதி காலை 11 மணியளவில் ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கம் நீலகிரி மாவட்ட கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதால் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நீலகிரி மாவட்ட கிளை உறுப்பினர்கள் அனைவரும் தங்களது உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

 

The post நவம்பர் 6-ம் தேதி செஞ்சிலுவை சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Red Cross District ,General ,Committee ,Ooty ,Indian Red Cross Nilgiri District Branch ,Nilgiri District ,Collector ,Lakshmi ,Indian Red Cross District Branch ,Red Cross District General ,Meeting ,Dinakaran ,
× RELATED அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு...