×

நாங்குநேரியில் வடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டம்

நெல்லை, அக்.11: வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய தலைவர் சௌம்யா ஆரோக்கிய எட்வின் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் ஒன்றிய ஆணையாளர் யமுனா, ராஜேஷ்வரன், ஒன்றிய துணைத்தலைவர் இசக்கிபாண்டி, ஒன்றிய கவுன்சிலர்கள் நல்லாசிரியர் அகஸ்டின் கீதா ராஜ், ஆரோக்கிய எட்வின், சங்கரலிங்கம், முருகேசன், ஜோசப் ஸ்டீபன் ராஜா, கிறிஸ்டி சுந்தர்ராஜ், பிரேமா எபனேசர், முத்துலட்சுமி, லட்சுமி, செந்தூர்பாண்டி, மீனா சுப்பையா, ஜெபகனி செந்தில்ராஜ், செல்வி லக்கண் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் பற்றியும், வர இருக்கின்ற வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு அதற்கு தேவையான அத்தனை நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

The post நாங்குநேரியில் வடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Nanguneri ,Nellai ,Nanguneri Panchayat Union ,President ,Soumya Arogya Edwin ,North East ,Union Commissioner ,Yamuna ,Rajeshwaran ,Union Vice-President ,Isaghipandi ,Union ,Councilors ,Nalla ,Northeast Monsoon ,Dinakaran ,
× RELATED நெல்லையில் நாதகவினர் திமுகவில் இணைந்தனர்