×

நெல்லையில் நாதகவினர் திமுகவில் இணைந்தனர்

நெல்லை: நெல்லை மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் கண்ணன் தலைமையில் இளைஞர் பாசறை நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் பார்வின், குருதி கொடை பாசறை மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், நாங்குநேரி தொகுதி செயலாளர் அந்தோனி விஜய் உட்பட 30 நிர்வாகிகள் கூண்டோடு விலகினர். இவர்களும் பிற கட்சிகளை சேர்ந்த 100 பேரும் நேற்று நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் திமுகவில் இணைந்தனர். அப்போது நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம். மைதீன்கான், கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், அப்துல்வகாப் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post நெல்லையில் நாதகவினர் திமுகவில் இணைந்தனர் appeared first on Dinakaran.

Tags : Nellai Nathakavins ,DMK ,Nellai ,Nellai District ,Naam ,Tamilar Party ,Kannan ,Youth Pasarai ,Nellai Central District ,Barvin ,Kurudi Kodai Pasarai District ,Ramakrishnan ,Nanguneri Constituency ,Anthony Vijay ,Nellai Nathakavinar ,Dinakaran ,
× RELATED திமுக தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம்