×
Saravana Stores

வாடிக்கையாளர்களுக்கு டூவீலரில் கஞ்சா விற்க முயன்ற 2 பேர் கைது

குமாரபாளையம், அக்.11: குமாரபாளையம் காவேரி நகர் ஆற்றுப்பாலம் அருகே, நேற்று மாலை டூவீலரில் 2 பேர், கஞ்சா பொட்டலங்களை விற்பதாக எஸ்ஐ தங்கவடிவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்த உதவி எஸ்ஐ, அங்கே நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தார். அவர்கள் காவேரி நகரை சேர்ந்த மதிவாணன்(40), ஓலப்பாளையத்தை சேர்ந்த மிராண்டாசெந்தில்(45) என்பது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், 3.100 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா சப்ளை செய்யும் வடமாநில வாலிபரிடம் வாங்கி, மாலை நேரத்தில் அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய காத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இவரையும் கைது செய்து டூவீலரை பறிமுதல் செய்தனர்.

The post வாடிக்கையாளர்களுக்கு டூவீலரில் கஞ்சா விற்க முயன்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kumarapalayam ,SI Thangavadivel ,Kumarapalayam Kaveri Nagar river bridge ,SI ,
× RELATED திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்