விபத்துகளை தடுப்பதற்காக குன்னூரில் சாலையோரங்களில் உள்ள செடிகள் அகற்றும் பணிகள் தீவிரம்

 

ஊட்டி, அக். 9: விபத்துகளை தடுப்பதற்காக குன்னூர் பகுதிகளில் சாலை ஓரங்களில் உள்ள செடிகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தற்போது வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக, நகர பகுதிகளை விட கிராம பகுதிகளில் கரடி, சிறுத்தை போன்ற விலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இவை மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வருவதால், அவ்வப்போது மனித விலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது. மேலும் குறிப்பாக இரவு நேரங்களில் செடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் வனவிலங்குகள் வாகனங்களில் வரும் நபர்களை எளிதில் தாக்கியும் வருகின்றன.
மேலும், சில சமயங்களில் பகல் நேரங்களிலேயே எதிரே வரும் வாகனங்களும் தெரிவதில்லை. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. விபத்தினை தடுக்கும் வகையில், நெடுஞ்சாலை துறையினர் பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்லும் சாலையோரங்களில் உள்ள செடி மற்றும் முட்புதர்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குன்னூர் அருகே சேலாஸ் – சோல்ராக் சாலையோரங்களில் உள்ள செடிகளை வெட்டி, அகற்றி வருகின்றனர். இதுபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளுக்கு செல்லும் சாலைகளையும் அப்புறப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

 

The post விபத்துகளை தடுப்பதற்காக குன்னூரில் சாலையோரங்களில் உள்ள செடிகள் அகற்றும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: