×

₹9 லட்சம் மோசடி செய்த ஆசிரியர் கொலை மிரட்டல் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் வெளிநாட்டில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி

வேலூர், அக்.9: மருத்துவ சீட் வாங்கித்தருவதாக கூறி ₹9 லட்சம் வாங்கிக்கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாக ஆசிரியர் மீது வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது. வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று வேலூர் தொரப்பாடி-அரியூர் ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் வசிக்கும் பகுதியில் ஆசிரியர் ஒருவர் எங்களுக்கு அறிமுகமானார். அவர் எனது மகளுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்புக்கான சீட் வாங்கித்தருவதாக கூறினார். அதற்கு பல லட்சம் செலவாகும் என்றும் கூறினார். அதனை நம்பி பல தவணைகளாக ₹9 லட்சம் வரை கொடுத்தேன். ஆனாலும் எனது மகளுக்கு மருத்துவ சீட் வாங்கித்தராமல் தட்டிக்கழித்து வருகிறார். பணத்தையும் திரும்ப தர மறுக்கிறார். இதை கேட்டால், ‘உனது பணத்தை திரும்ப தரமுடியாது, எங்கு வேண்டுமானாலும் புகார் செய்துகொள். மீண்டும் பணம் கேட்டு வந்தால் குடும்பத்தையே கொன்றுவிடுவோம்’ என மிரட்டுகிறார். எனவே அவரிடம் இருந்து பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post ₹9 லட்சம் மோசடி செய்த ஆசிரியர் கொலை மிரட்டல் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் வெளிநாட்டில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி appeared first on Dinakaran.

Tags : Vellore SP ,Vellore ,Vellore Torappadi- ,Ariyur ,
× RELATED மனைவியை தவறான எண்ணத்தில் பார்ப்பதாக...