×

மாணவி தற்கொலை

பரமத்திவேலூர், அக்.9: பரமத்திவேலூரை அடுத்த படமுடிபாளையத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மகள் தீபிகா(16). பரமத்திவேலூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் தீபிகா நேற்று முன்தினம், இரவு வீட்டில் கவலையுடன் இருந்தார். இரவு 10 மணிக்கு மேல் படுக்கை அறையில் இருந்த தீபிகா, மின் விசிறியில் தூக்கு போட்டுக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது பெற்றோர், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் தீபிகாவை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தீபிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Paramathivelur ,Gurumurthy ,Padamudipalayam ,Deepika ,Dinakaran ,
× RELATED இன்ஸ்டாகிராம் மோகத்தால் சீரழிவு: 13...