×

₹1.98 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

திருச்செங்கோடு, அக். 9: திருச்செங்கோடு, வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், வாராந்திர பருத்தி ஏலம் நேற்று நடந்தது. இதில் 101 மூட்டை பருத்தி ₹1.98 லட்சத்திற்கு விற்பனையானது. பருத்தி ரகங்களை முசிறி புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை, திருத்தலையூர், சேங்கணம், ராசிபுரம், கதிரா நல்லூர், புதுச்சத்திரம், துறையூர், அம்மம்பாளையம், மருவத்தூர் போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் பிடி பருத்தி குவிண்டால் ₹5,900 முதல் 7899 வரை விற்பனையானது.

The post ₹1.98 லட்சத்திற்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Agricultural Producers Cooperative Marketing Society ,Musiri Pudupatti ,North Nalliyampatti ,South Nalliyampatti ,Thandalai ,
× RELATED மல்லசமுத்திரத்தில் 75 மூட்டை பருத்தி ₹1.50 லட்சத்திற்கு ஏலம்