×

தேனி புதிய பஸ்நிலையத்தில் பேருந்து மோதி சிறுமி பலி

தேனி, அக்.8: தேனி புதிய பஸ்நிலையத்தில் பஸ் மோதிய விபத்தில் சிறுமி பரிதாபமாக பலியானார். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள எரதிமக்காள்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி மனைவி கருப்பாயி. இவர்களது மகன் பரத், மகள் காளீஸ்வரி (17). பரத் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்துள்ளார். இது தொடர்பான பிரச்னையில் பெண்ணின் குடும்பத்தினர் காளீஸ்வரியை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மனவேதனையடைந்த காளீஸ்வரி நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியேறி தேனி புதிய பஸ்நிலையத்திற்கு சென்றார். இதையறிந்த உறவினர்கள் அங்கு சென்று அவரிடம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பஸ்நிலையத்திற்குள் வந்த அரசு பஸ் காளீஸ்வரி மீது மோதியது. இதில் கீழே விழுந்த சிறுமி மீது பஸ்சுக்குள் சிக்கினார். சக்கரம் ஏறி, இறங்கியதில் காளீஸ்வரி தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரில் தேனி போலீசார், அரசு பஸ் டிரைவர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தேனி புதிய பஸ்நிலையத்தில் பேருந்து மோதி சிறுமி பலி appeared first on Dinakaran.

Tags : Theni New Bus Station ,Theni ,Theni New Bus Stand ,Veluchami ,Karuppai ,Erathimakalpatti ,Andipatti, Theni district ,Bharat ,Kaliswari ,
× RELATED தேனி புதிய பஸ்நிலையத்தில் கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது