×

தேனி புதிய பஸ்நிலையத்தில் கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது

தேனி, நவ. 26: தேனி புதிய பஸ் நிலையத்தில் கஞ்சா வைத்திருந்த தேவாரம் மற்றும் மதுரையை சேர்ந்த 4 வாலிபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தேனி போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் இளங்குமரன் தலைமையிலான போலீசார், தேனி நகர் புதிய பஸ்நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுரை பஸ் நிறுத்தமிடத்தில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நான்கு வாலிபர்களை போலிசார் பிடித்து, சோதனையிட்டதுபோது அவர்களிடம் 1 கிலோ100 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், கஞ்சாவை வைத்திருந்த தேவராத்தை சேர்ந்த பழனிவேல் மகன் சீனிவாசன்(22) தேவாரம் மூணாண்டிபட்டியை சேர்ந்த முருகன் மகன் தியாகு(19), மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த சந்திரன் மகன் அய்யணன்(19), மதுரை இளமனூரை சேர்ந்த மணிகண்டன் மகன் ஆகாஷ்(19) ஆகியோரை கைது செய்தனர்.

The post தேனி புதிய பஸ்நிலையத்தில் கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Theni New Bus Station ,Theni ,Devaram ,Madurai ,Theni Police ,Sub-Inspector ,Ilangumaran ,New Bus Station ,
× RELATED போடி அருகே வெவ்வேறு பகுதியில் 2 இளம்பெண்கள் மாயம்