×

குன்னூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே மழையால் தடுப்புச்சுவர் இடியும் அபாயம்

 

ஊட்டி, அக்.8: குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு அவ்வப்போது போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. இதனை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குன்னூர் சுப்பிரமணியர் ேகாயில் முன்பு உள்ள தடுப்புச்சுவர் இடிந்து சேதம் ஏற்பட்டுள்ளது.

தற்போது மழை அதிகம் பெய்து வரும் நிலையில், இந்த தடுப்புச்சுவரின் அடிப்பகுதி மேலும் சேதம் ஏற்பட்டு கற்கள் சரிந்து விழுந்து வருகிறது. இந்த தடுப்புச்சுவர் முழுமையாக இடிந்து விழும் நிலை உள்ளதால் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குன்னூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே மழையால் தடுப்புச்சுவர் இடியும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Subramaniam Swamy temple ,Coonoor ,Ooty ,
× RELATED கோத்தகிரி பகுதியில் மேக மூட்டம், சாரல் மழை