×

பனை விதை நடவு செய்த நாமக்கல் எம்பி

 

மோகனூர், அக்.7: நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் பதவியேற்று நூறாவது நாள் விழாவின் தொடர்ச்சியாக, பரளி மற்றும் செவிட்டுரங்கன்பட்டியில் 1500 பனை விதைகள் நடும் விழா நடந்தது.
மோகனூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய கொமதேக சார்பில் நடைபெற்ற விழாவில், கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட தலைவர் பழனிமலை, மோகனூர் நகர செயலாளர் செல்வராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார், வடக்கு ஒன்றிய செயலாளர் குப்புசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், மகளிரணி நிர்வாகிகள் சுதா, பிரேமலதா, வனிதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post பனை விதை நடவு செய்த நாமக்கல் எம்பி appeared first on Dinakaran.

Tags : Namakkal MB ,MOHANUR ,NAMAKAL ,MADESWARAN ,OF INAUGURATION ,PARALI ,SEVITTURANKANPATI ,North ,South Union Komateka ,Moganur ,
× RELATED 2 நாள் குடிநீர் சப்ளை நிறுத்தம்