×

கொலை வழக்கில் தேடப்பட்டவர் மும்பையில் கைது வேலூரில் நடந்த

வேலூர், அக்.4: வேலூரில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்ட நபரை மும்பையில் போலீசார் கைது செய்தனர். வேலூர் வசந்தபுரத்தைச் சேர்ந்தவர் நைனா என்ற ஜெயப்பிரகாஷ், கூலித் தொழிலாளி. கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி வேலூரில் நண்பரின் திருமணத்திற்கு வந்த இளைஞர்கள் 8 பேர் மது போதையில், பீர்பாட்டிலால் தாக்கி ஜெயப்பிரகாஷை கொலை செய்தனர். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வேலூரைச் சேர்ந்த 5 பேர், புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 8 பேர் மீது, வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைாக உள்ள புதுச்சேரி கரிகாலம்பாக்கத்தைச் சேர்ந்த அய்யனார் என்ற ரோஸ் அய்யனார்(24) என்பவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த அய்யனார் மும்பையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்ஐ சந்தோஷ்குமார் தலைமையிலான குழுவினர் மும்பை விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த அய்யானரை கைது செய்து நேற்று வேலூர் அழைத்து வந்தனர்.

The post கொலை வழக்கில் தேடப்பட்டவர் மும்பையில் கைது வேலூரில் நடந்த appeared first on Dinakaran.

Tags : Vellore ,Mumbai ,Jayaprakash ,Vellore Vasanthapuram ,Naina ,
× RELATED மனைவியை தவறான எண்ணத்தில் பார்ப்பதாக...