வரும் 2ம்தேதி ஆஞ்சநேயருக்கு சாத்த ஒரு லட்சத்து 8 வடை தயாரிக்கும் பணி துவக்கம்

நாமக்கல் : அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமி சாத்த, ஒரு லட்சத்து 8 வடை தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 2ம்தேதி அனுமன் (ஆஞ்சநேயர்) ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு அன்று அதிகாலை ஒரு லட்சத்து 8 வடை மாலை சாத்தப்படுகிறது. இதற்காக வடை தயாரிக்கும் பணி நேற்று ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் துவங்கியுள்ளது. ரங்கம் ரங்கநாதர் கோயில் மடப்பள்ளியை சேர்ந்த சமையல் கலைஞர்கள் 32 பேர், இந்த வடை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வடை தயாரிக்க 32 கிலோ மிளகு, சீரகம், 120 கிலோ உப்பு, 900 லிட்டர் நல்லெண்ணெய், 2,500 கிலோ உளுந்து மாவு ஆகியவற்றை பயன்படுத்தி வடை தயாரிக்கப்படுகிறது. அனுமன் ஜெயந்தி விழாவுக்கான ஏற்பாடுகளையும் கோயில் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கோயில் அலுவலகத்தில் தினமும் ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள்….

The post வரும் 2ம்தேதி ஆஞ்சநேயருக்கு சாத்த ஒரு லட்சத்து 8 வடை தயாரிக்கும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: