×

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

காட்டுமன்னார்கோவில், அக் 2: காட்டுமன்னார்கோவில் அடுத்த டி.நெடுஞ்சேரி பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடந்து வருவதாக சிறப்பு தனிப்படை மற்றும் புத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டி.நெடுஞ்சேரி, புத்தூர், ராயநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது டி. நெடுஞ்சேரி விளாகம் சாலை பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்து, அவரது வாகனத்தில் இருந்த அரசு டாஸ்மாக் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த காமாட்சி மகன் செந்தில் குமார் (42) என்பது தெரியவந்தது. இதுபோல் ராயநல்லூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் அரசு மதுபாட்டில் வைத்திருந்த பிச்சைமுத்து மகன் ஐயப்பன் (42) என்பவரை பிடித்தனர். இது குறித்து காவல் ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து செந்தில்குமார், ஐயப்பன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

The post மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kattumannarkoil ,Special Special Force ,Puttur Police ,T. Netuncheri ,T. Netuncherry ,Puttur ,Rayanallur ,Dinakaran ,
× RELATED லஞ்சம் வாங்கிய விஏஓவுக்கு 2 ஆண்டு சிறை