×

லஞ்சம் வாங்கிய விஏஓவுக்கு 2 ஆண்டு சிறை

 

கடலூர், நவ. 17: தானே புயல் நிவாரண தொகை வழங்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாலுகா மேல் பருத்திகுடியை சேர்ந்தவர் கோபால் மகன் ஆசைத்தம்பி. இவர் கடந்த 2012ம் ஆண்டு தானே புயல் நிவாரணத் தொகை பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலரான வீராசாமி என்பவரை அணுகியுள்ளார். இதற்கு கிராம நிர்வாக அலுவலர் வீராசாமி(65), 9 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இது குறித்து ஆசைதம்பி, கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்தார். அதன்படி கடந்த 6.3.2012ல், சிதம்பரம் காந்தி சிலை அருகில் லஞ்சப்பணம் ரூ.9,000 பெற்ற போது கிராம நிர்வாக அலுவலர் வீராசாமியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர் மீது கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சாட்சிகள் விசாரணை நடந்து வந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு கூறினார் அவர் தனது தீர்ப்பில், வீராசாமி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 2 வருடம் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலரேவதி ஆஜராகி வாதாடினார்.

The post லஞ்சம் வாங்கிய விஏஓவுக்கு 2 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : VAO ,Cuddalore ,District ,Kattumannarkoil Taluk Mell ,
× RELATED பட்டா மாறுதலுக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் தாசில்தார், விஏஓ கைது