இந்நிலையில் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் வாரிமிட்டா மலையடிவாரத்தில் பக்தர்கள் செல்லும் பாதையில் உள்ள தேவஸ்தான கட்டுப்பாட்டு அலுவலகம் அருகே சிறுத்தை நடமாடியுள்ளது. இதனைக்கண்ட இரவுக்காவலர் உடனடியாக தேவஸ்தான மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறை மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் சி.சி.டிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுத்தை நடமாட்டம் தெரிந்தது. அங்குள்ள தெரு நாய்களை வேட்டையாட வந்த சிறுத்தை, மனித நடமாட்டம் காரணமாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று பதுங்கியது தெரிந்தது. இதனிடையே இன்று காலை 6 மணிக்கு வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சிறுத்தை நடமாட்டம் குறித்து உஷாராக செல்லுமாறு தெரிவித்தனர். இதனால் அச்சத்துடன் பக்தர்கள் மலைப்பாதையில் சென்றனர்.
The post திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்: பக்தர்கள் அச்சம் appeared first on Dinakaran.