×

வேலூர் சங்கமம் கலைத்திருவிழாவில் 400 கலைஞர்கள் அசத்தல் இன்று நிறைவு விழா கோட்டை மைதானத்தில் கோலாகலம்

வேலூர், செப்.29: மிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் வேலூர் கோட்டை மைதானத்தில் நடந்த வேலூர் சங்கமம் கலைத்திருவிழாவில் 400 கலைஞர்கள் கலந்து கொண்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் அனைத்து முக்கிய நகரங்களில் சங்கமம் கலைத்திருவிழா நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேலூர் சங்ககம் மற்றும் நம்ம ஊரு திருவிழா வேலூர் கோட்டை மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கி கலைத்திருவிழாவை தொடங்கி வைத்தார். கலைபண்பாட்டு துறை துணை இயக்குனர் ஹேம்நாத், ஆ்ரடிஓ பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் காவடியாட்டம், புரவியாட்டம், புலியாட்டம், பன்முகப்பறை, பம்பை, சிலம்பாட்டம், குருமன்ஸ் சேவையாட்டம், தப்பாட்டம், கோலாட்டம், பெரிய மேளம், தெருக்கூத்து, கொக்கலிக்கட்டை ஆட்டம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த 400 கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிக்காட்டினர். இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட அளவில் நடைபெற்ற குரலிசை, கருவியிசை, பரத நாட்டியம், கிராமிய கலை, ஓவியம் என பல்வேறு தலைப்புகளில் நடந்த போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. இதனை கலெக்டர் சுப்புலட்சுமி வழங்கி பாராட்டினார். கலைத்திருவிழாவின் நிறைவு விழா இன்று நடைபெறுகிறது.

The post வேலூர் சங்கமம் கலைத்திருவிழாவில் 400 கலைஞர்கள் அசத்தல் இன்று நிறைவு விழா கோட்டை மைதானத்தில் கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Vellore Sangam Art Festival ,Fort Ground ,Vellore ,Vellore Fort ,Arts and Culture Department of the Government of Tamil Nadu ,Arts and Culture Department of the Tamil Nadu Government ,Fort Maidan ,Dinakaran ,
× RELATED மனைவியை தவறான எண்ணத்தில் பார்ப்பதாக...