ஒரு கிராம் ரூ7060: தொடர்ந்து எகிறும் தங்கம் விலை


சென்னை: வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ60 உயர்ந்து கிராம் ரூ7,060-க்கும், சவரனுக்கு ரூ480 உயர்ந்து ரூ56,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கம் விலை இந்த ஆண்டின் ஏப்ரல் மாத தொடக்கத்தில் புதிய உச்சத்தை தொட்ட நிலையில், அதன்பிறகு ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் தங்க மார்க்கெட் வரலாற்றில் முதன்முறையாக கிராம் ரூ7 ஆயிரத்தை தொட்ட நிலையில், நேற்றும் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ60 உயர்ந்து மீண்டும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது கிராம் ரூ7,060-க்கும், சவரனுக்கு ரூ480 உயர்ந்து சவரன் ரூ56,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 5 நாள்களில் மட்டும் கிராமுக்கு ரூ175ம், சவரனுக்கு ரூ1,400ம் விலை உயர்ந்துள்ளது. வரலாறு காணாத இந்த தொடர் விலையேற்றம், தங்க நகை வாங்க எண்ணுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post ஒரு கிராம் ரூ7060: தொடர்ந்து எகிறும் தங்கம் விலை appeared first on Dinakaran.

Related Stories: