சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ், ஏஐ சான்றிதழ் படிப்பு

சென்னை: சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் என்ற இரண்டு சான்றிதழ் படிப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்கென வடிவமைக்கப்பட்ட உள்ளடக்கங்களுடன், ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர்களைக் கொண்டு இதற்கான பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் கற்பிக்கப்படும் இப்படிப்புகளின் மூலம் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்நெறி அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதனை நோக்கமாக கொண்டு இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 16ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சென்னை ஐஐடியுடன் இணைந்து செயல்பட விரும்பும் பள்ளிகள் https://school-connect.study.iitm.ac.in/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று தங்களை பதிவு செய்துகொள்ளாம். படிப்பு முடிந்ததும், தகுதியான மாணவர்களுக்கு ஐ.ஐ.டி சென்னை சான்றிதழ்களை வழங்கும். தற்போதைய நிலவரப்படி, 50 பள்ளிகள் ஏற்கனவே சென்னை ஐ.ஐ.டி உடன் கூட்டு சேர்ந்துள்ளன, மேலும் 11,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் முந்தைய தொகுப்பிலிருந்து பயனடைந்துள்ளனர் என்று சென்னை ஐ.ஐ.டி தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள், பதிவுசெய்யப்பட்ட விரிவுரை வீடியோக்கள், நேரடிப் பயிற்சி ஆகியவை அடங்கும். “பள்ளி மாணவர்கள் சுயமாக ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படும் ரோபோக்களை உருவாக்குவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டேட்டா சயின்ஸ் படிப்பைத் தொடரும் மாணவர்கள், அர்த்தமுள்ள நுண்ணறிவுகளைப் பெற தரவுத்தொகுப்புகளைப் பயன்படுத்தி, செயல்திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற படிப்புகள், மாணவர்களை பல்வேறு துறைகளுக்கு வெளிப்படுத்தி, அவர்களின் ஆர்வங்கள் மற்றும் பலத்தை அடையாளம் காண உதவுகின்றன’’ என ஐ.ஐ.டி சென்னை டீன் (கல்வி படிப்புகள்) பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ் கூறினார்.

The post சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ், ஏஐ சான்றிதழ் படிப்பு appeared first on Dinakaran.

Related Stories: