உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் ஊர் திரும்பினர்: மீட்க உதவிய ராணுவம், தமிழ்நாடு அரசுக்கு நன்றி

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய மீட்கப்பட்ட தமிழர்கள் 17 பேர் சொந்த ஊரான சிதம்பரம் சென்றடைந்தனர். நிலச்சரிவில் சிக்கிய தருணத்தை மிரட்சியோடு விவரித்த அவர்கள் துரிதமாக செயல்பட்ட தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த 30 பேர் உத்தரகாண்ட் மாநிலம் ஆதிகைலாஸ் கோயிலுக்கு கடந்த 1ம் தேதி ஆன்மிக சுற்றுலா சென்றனர். கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் டெல்லி நோக்கி சென்றபோது தாவாகாட் என்ற பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் வெளியே வரமுடியாமல் சிக்கி கொண்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து ஹாலிகாப்டர் மூலம் அனைவரும் பத்திரமாக மீட்டனர். 30 பேரில் 17 பேர் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டு பின்னர் அங்கிருந்து கார் மூலம் சொந்த ஊரான சிதம்பரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நிலச்சரிவு சிக்கிய தருணத்தை மிரட்சியுடன் விவரித்த அவர்கள் துரிதமாக செயல்பட்டு மீட்ட தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தனர். 30 பேரில் 17 பேர் ஊர் திரும்பிய நிலையில் எஞ்சிய 13பேரும் ரயில் மூலம் இன்று பிற்பகல் வந்தடைய உள்ளனர்.

The post உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் ஊர் திரும்பினர்: மீட்க உதவிய ராணுவம், தமிழ்நாடு அரசுக்கு நன்றி appeared first on Dinakaran.

Related Stories: