இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இரவு 8.25, 8.55, 10.20 மணிக்கும், திருவள்ளூருக்கு இரவு 8.05 மணிக்கும், கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.45மணிக்கும் புறப்படும் மின்சார ரயில்கள் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை (செப்.18, 20) ரத்து செய்யப்படும்.
கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கு அதிகாலை 4.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் வியாழன் மற்றும் சனிக்கிழமை (செப்.19, 21) ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும். மறுமாா்க்கமாக திருவள்ளூரில் இருந்து இரவு 9.35 மணிக்கும், கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 9.55 மணிக்கும் புறப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும்.
மேலும், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இரவு 11.05, 11.30, 11.59 மணிக்கு புறப்படும் ரயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப்படும். கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 10.10, 10.40, 11.15 மணிக்கு வரும் ரயில்களும், செங்கல்பட்டு, திரமால்பூரில் இருந்து இரவு 8, 9.10, 10.10, 11 மணிக்கு வரும் ரயில்களும் எழும்பூருடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னை கடற்கரை ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் நடைபெறவுள்ளதால் மின்சார ரயில் சேவையில் மாற்றம் appeared first on Dinakaran.