×

விநாயகர் சிலையில் பண மாலையை திருட முயன்ற ரவுடி கைது

பெரம்பூர்: கொளத்தூர் ராஜமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மகாத்மா காந்தி நகர் மெயின் ரோடு பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையை அப்பகுதி மக்கள் வைத்திருந்தனர். கடந்த 11ம் தேதி இரவு சுமார் 11 மணி அளவில் அங்கு வந்த கொளத்தூர் மகாத்மா காந்தி நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்கிற சின்ன கருப்பு என்ற ரவுடி விநாயகர் கழுத்தில் போடப்பட்டிருந்த இருபது ரூபாய் நோட்டு மாலையை அறுத்து அதிலிருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் அவரை பிடிக்க முற்பட்டபோது ரூபாய் நோட்டு மாலையை தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார். இதுகுறித்து மகாத்மா காந்தி நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் செயலாளர் சரவணன் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து சரித்திர பதிவேடு ரவுடியான சீனிவாசன் என்கின்ற சின்ன கருப்பை தேடி வந்தனர். நேற்று முன்தினம் அவரை ராஜமங்கலம் பகுதியில் வைத்து கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post விநாயகர் சிலையில் பண மாலையை திருட முயன்ற ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Mahatma Gandhi Nagar Main Road ,Kolathur Rajamangalam Police Station ,Ganesha ,Ganesha Chaturthi ,
× RELATED ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி: மர்ம நபருக்கு வலை