×

ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி: மர்ம நபருக்கு வலை

பெரம்பூர்: பெரம்பூரில் உள்ள ஏடிஎம் மையத்தின் கண்ணாடியை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர், அலாரம் ஒலித்ததால் தப்பியோடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். பெரம்பூர் ராகவன் தெருவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு, அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் பணம் எடுக்க சென்றபோது ஏடிஎம் கதவின் கண்ணாடி மற்றும் உள்ளே இருந்து மெஷின் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், செம்பியம் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். போலீசார் கொடுத்த தகவல்படி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் வந்து விசாரித்துள்ளார். பின்னர் இதுபற்றி செம்பியம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் மிஷினை உடைக்க முயற்சி செய்வதும், அலாரம் ஒலித்ததால் தப்பி ஓடியதும் தெரிந்தது. அவரை தேடி வருகின்றனர்.

The post ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி: மர்ம நபருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Perambur ,Perampur ,Indian Overseas Bank ,Perambur Raghavan Street ,Dinakaran ,
× RELATED சென்னை பெரம்பூரில் வங்கியின் ஏடிஎம் மெஷினை உடைத்து பணத்தை திருட முயற்சி