முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி

 

சேலம், செப்.11: சேலம் காந்தி ஸ்டேடியத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நேற்று தொடங்கியது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி சேலம் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் வரவேற்றார். எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், அருள், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து போட்டியை தொடங்கி வைத்தார்.

முதல் நாளான நேற்று பள்ளி மாணவர்களுக்கான வாலிபால், கூடைப்பந்து, செஸ், மேசைப்பந்து போட்டிகள் காந்தி ஸ்டேடியத்தில் நடந்தது. வாலிபால் போட்டியில் ஏற்காடு செயின்ட் ஜோசப் பள்ளியும், சேலம் மாவட்ட அரசு மாதிரிப்பள்ளி மாணவர்களும் மோதினர். அதேபோல், ஹாக்கி சிறுமலர் மேல்நிலைப்பள்ளியிலும், கேரம் ஒய்எம்சிஏவிலும், இறகுப்பந்து கோட்டை மாநகராட்சி உள் விளையாட்டு அரங்கத்திலும் நடைப்பெற்று வருகிறது.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் உடற்கல்வி அலுவலர் லாரன்ஸ், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இரண்டாம் நாளான இன்று (11ம்தேதி) பள்ளி மாணவிகளுக்கான தடகளப்போட்டி பெரியார் பல்கலைக்கழகத்திலும், வாலிபால், கூடைப்பந்து, மேசைப்பந்து, செஸ் உள்ளிட்ட போட்டிகள் காந்தி விளையாட்டு மைதானத்திலும் நடைபெறுவதாக உடற்கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர்.

The post முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி appeared first on Dinakaran.

Related Stories: