17 வழித்தடங்களில் எடுத்துச் செல்ல பெருநகர காவல்துறை அனுமதி சென்னையில் 15ம் ேததி விநாயகர் சிலைகள் ஊர்வலம்: பட்டினப்பாக்கம் உள்ளிட்ட 4 இடங்களில் சிலைகள் கரைக்க ஏற்பாடு

சென்னை: சென்னையில் வரும் 15ம் ேததி விநாயகர் சிலைகளை 17 வழித்தடங்களில் ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைக்க பெருநகர காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்களை தவிர்க்க 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னை பெருநகர காவல் எல்லையில் 1,524 சிலைகள் வைத்து வழிபாடு நடத்த இந்து அமைப்பாளர்களுக்கு போலீசார் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கினர். சென்னையில் பிரதிஷ்டை செய்த சிலைகளை 17 வழித்தடங்களில் ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி சனிக்கிழமை அன்று பாரதிய சிவசேனா அமைப்பினரும், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்டுள்ள 4 இடங்களில் கடற்கரை நீர்நிலைகளில் கரைக்கின்றனர். அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், நரேந்திரன் நாயர், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையில் 16,500 காவலர்கள் மற்றும் 2 ஆயிரம் ஊர்க்காவல்படையினர் பாதுகாப்பு பணி மேற்கொள்கின்றனர். பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் என 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்க காவல்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லும் வழித்தடங்கள் மற்றும் கரைக்கும் இடங்கள் விவரம் வருமாறு: சென்னை நுங்கம்பாக்கம், சிந்தாதரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், சவுகார்பேட்டை, அயனாவரம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை, தி.நகர், எம்.ஜி.ஆர் நகர், வடபழனி, சைதாப்பேட்டை வில்லிவாக்கம், கொளத்தூர், திருமங்கலம், மதுரவாயல், கோயம்பேடு, அரும்பாக்கம் ஆகிய இடங்கள் மற்றும் இதன் சுற்றுப்புற இடங்களில் உள்ள விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக ஊர்வலமாக சென்று, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் கடலில் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடையாறு, கிண்டி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் நங்கநல்லூர், வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், நீலாங்கரை பல்கலை நகர் கடலில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர், கொடுங்கையூர் மற்றும் மாதவரம் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் காசிமேடு மீன்பிடி துறைமுகம் கடலிலும் கரைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

The post 17 வழித்தடங்களில் எடுத்துச் செல்ல பெருநகர காவல்துறை அனுமதி சென்னையில் 15ம் ேததி விநாயகர் சிலைகள் ஊர்வலம்: பட்டினப்பாக்கம் உள்ளிட்ட 4 இடங்களில் சிலைகள் கரைக்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: