வேளாண் பல்கலை விழா 9,526 மாணவர்களுக்கு கவர்னர் பட்டம் வழங்கினார்: அமைச்சர் புறக்கணிப்பு

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 44-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நேற்று நடந்தது. இதில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து பட்டங்களை வழங்கினார். சிறப்பு விருந்தினராக இந்திய அரசு பயிர் ரகங்கள் மற்றும் உழவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தலைவர் திரிலோச்சன் மஹாபத்ரா கலந்து கொண்டு பேசினார்.

விழாவில் மொத்தம் 9,526 மாணவர்கள் இளமறிவியல், முதுநிலை பட்ட மேற்படிப்பு மற்றும் முனைவர் பிரிவில் பட்டம் பெற்றனர்.துணைவேந்தர் கீதாலட்சுமி, பதிவாளர் தமிழ் வேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் கல்ந்துகொள்வதாக இருந்தது. ஆனால் அவர் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டார்.

 

The post வேளாண் பல்கலை விழா 9,526 மாணவர்களுக்கு கவர்னர் பட்டம் வழங்கினார்: அமைச்சர் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: