சென்னை: தமிழ்நாடு இணைய பாதுகாப்பு கொள்கை 2.0-வை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதன்படி, இணைய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை சேகரிக்க இணைய பாதுகாப்பு நிகழ்வு குழு அமைக்கப்படும். தமிழ்நாடு கணினி அவசர குழு அனைத்து துறைகளுடன் இணைந்து கொள்கையை அமல்படுத்தும் அமைப்பாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.