கூடலூர், செப்.7: கூடலூர் நகர கழகம் மற்றும் நடுவட்டம் பேரூர் கழக திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நகர கழக அவை தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் இளஞ்செழியன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் முபாரக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, செயற்குழு உறுப்பினர்கள் திராவிட மணி காசிலிங்கம், நகர்மன்ற தலைவர் பரிமளா, மாவட்ட அமைப்பாளர் சீனி, நகர துணை செயலாளர்கள் ஜபருல்லா, ஜெயக்குமார், நாகேஸ்வரி, பொருளாளர், தமிழழகன், மாவட்ட பிரதிநிதிகள் ரசாக், நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திமுக முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்துவது, கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவது மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நிகழ்வில் கூடலூர் ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, பந்தலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஷ்,
தலைமை கழக பேச்சாளர் பாண்டியராஜ், திட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் வெண்ணிலா, மகேஸ்வரன், வார்டு செயலாளர்கள் மூர்த்தி, இளங்கோ கரீம், ராஜகோபால், அபுதாஹிர், ராஜி, மணி, குமார், கிருஷ்ணமூர்த்தி, மல்லிகிராஜ், பிரகாஷ், விஜயராஜா, கருணாநிதி, சடையபிள்ளை, பாலகிருஷ்ணன், ரெனால்ட் வின்சென்ட், இஸ்மாயில், கனகராஜ், முத்துவேல், சாதிக், நகர்மன்ற உறுப்பினர்கள் சத்தியசீலன், உஷா, கௌசல்யா, ஆபிதா, தனலட்சுமி, சகுந்தலா, மும்தாஜ், வாணி, இளைஞர் அணியினர் விஜயகுமார், நியாஸ், நிர்மல், ராமு, செல்லதுரை, கிஷோர், சந்தோஷ், நடராஜ், நிதின், விபின், நவீன், சிவா, ஜானி, மலையரசன், பழனி, பாக நிலை முகவர்கள் மூசா, பிரகாஷ், ஜோதி நாகராஜ், கலையரசி, உள்பட பலர் கலந்துக்கொண்டனர். நடுவட்டம் பேரூராட்சி தலைவர் கலியபெருமாள் நன்றி கூறினார்.
The post திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.