சேலம், செப்.6: சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை சார்பில், செப்டம்பர் மாதம் முழுவதும் “போஷன்மா’’ என்ற தலைப்பில் ஊட்டச்சத்து மாத விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, மகுடஞ்சாவடி வட்டாரத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்தின் அவசியம் குறித்தும், ரத்தசோகை உள்ளிட்ட பாதிப்புகளை தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்ெகாண்டு வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட திட்ட அலுவலர் சுகந்தி கூறுகையில்,“போஷன்மா நிகழ்வை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஊட்டச்சத்து பற்றாக்குறை, ரத்தசோகை உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், குழந்தை திருமணம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள், பெண் கல்வியின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்து வருகிறோம்,’’என்றார்.
The post மகுடஞ்சாவடி வட்டாரத்தில் போஷன்மா நிகழ்ச்சி appeared first on Dinakaran.