×

எல்ஐசி திட்டங்களை விளக்கி இன்சூரன்ஸ் வாரவிழா பேரணி

சேலம், செப்.6: 68வது இன்சூரன்ஸ் வார விழா கொண்டாட்டங்களின் ஒரு நிகழ்வாக கடந்த 4ம் தேதி எல்.ஐ.சி ஊழியர்களும், முகவர்களும் கலந்துகொண்ட பேரணி நடந்தது. சேலம் தெற்கு (கோட்டை) கிளையிலிருந்து முதுநிலை கோட்ட மேலாளர் அனந்தகுமார் கொடியசைத்து இந்த பேரணியை துவக்கி வைத்தார். மக்களிடம் காப்பீட்டு உணர்வை ஏற்படுத்தவும், எல்.ஐ.சியின் திட்டங்களை மக்களிடம் பிரபலப்படுத்தும் நோக்கில் பேரணியில் பங்கேற்றவர்கள் எல்.ஐ.சியின் சாதனை விளக்க பதாகைகளையும், எல்.ஐ.சியின் பல்வேறு திட்டங்களின் சிறப்பம்சங்களை விளக்கும் பதாகைகளையும் ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியே சென்று இறுதியாக ஜான்சன்பேட்டையில் உள்ள எல்.ஐ.சி கோட்ட அலுவலகத்தை அடைந்தனர். முன்னூற்றுக்கும் மேற்பட்ட முகவர்கள், கோட்ட அலுவலக மற்றும் நகர கிளை ஊழியர்கள் இதில் பங்கேற்றனர்.

The post எல்ஐசி திட்டங்களை விளக்கி இன்சூரன்ஸ் வாரவிழா பேரணி appeared first on Dinakaran.

Tags : Insurance Week Rally ,LIC ,Salem ,68th Insurance Week Festival ,L.A. I. ,Master's Fort ,Manager ,Ananthakumar ,South ,(Fort) ,Dinakaran ,
× RELATED இன்போஸிசுடன் இணைந்து டிஜிட்டல் இயங்குதளம் அமைக்கிறது எல்ஐசி