×

கரும்பு லோடு சரிந்து விபத்து

ஓமலூர், செப்.13: ஓமலூர் அருகே, சர்வீஸ் சாலையில் கரும்பு லோடு ஏற்றி சென்ற லாரியில் இருந்து 5 டன் கரும்புகள், திடீரென சாலையில் சரிந்து விழுந்தது. இதனால், அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 100 அடி தூரம், கரும்புகள் சாலையில் சிதறி கிடந்தது. சிதறி கிடந்த கரும்புகளை சாப்பிடுவதற்காக மக்கள் எடுத்துச் சென்றனர். பின்னர் கரும்புகளை அப்புறப்படுத்தி சாலையில் வாகனங்களை அனுமதித்தனர்.

The post கரும்பு லோடு சரிந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Sugarcane load ,Omalur ,Dinakaran ,
× RELATED சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை