×

இரு கோஷ்டியை சேர்ந்த 7 பேர் மீது வழக்கு

சேலம், செப்.12: சேலத்தில் விநாயகர் சிலை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் இருகோஷ்டியை சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அழகாபுரம் ராமன்காடு பகுதியை சேர்ந்தவர் லதா(35). கடந்த 6ம்தேதி இரவு வீட்டின் அருகில் விநாயகர் சிலை வைத்து சாமி கும்பிடும் வகையில் மேடை அமைத்துக்ெகாண்டிருந்தார். போலீசில் அனுமதி பெறாததால் அதனை அகற்றினார். அந்நேரத்தில், என் வீட்டின் அருகில் ஏன் மேடை அமைக்கிறீர்கள் என அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கேட்டுள்ளார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் லதாவும், ராஜேந்திரனும் காயம் அடைந்தனர். இதுகுறித்து லதா கொடுத்த புகாரின்பேரில் அழகாபுரம் போலீசார், ராஜேந்திரன் மீது மானபங்கப்படுத்தி, தாக்கியதாக வழக்கு பதிவு செய்தனர். அதே போல ராஜேந்திரன் கொடுத்த புகாரின்பேரில், கொலை மிரட்டல் விடுத்து, கடுமையாக தாக்கியதாக அசோக், ஏழுமலை, சக்தி, மனோஜ், லதா, பூங்கொடி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இரு கோஷ்டியை சேர்ந்த 7 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Salem ,Ganesha ,Latha ,Ramankadu ,Salem Alaghapuram ,
× RELATED போதையில் விநாயகர் சிலையை சேதப்படுத்திய 2 பேர் கைது