×

மகன் கண்முன்னே தாய் பலி

சேலம், செப்.14: சேலம் ஜலகண்டாபுரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஈஸ்வரி(35). இவரது உறவினர் வீடு பனமரத்துபட்டியில் உள்ளது. இவரை பார்ப்பதற்காக ஈஸ்வரியும், அவரது மகன் மணிகண்டனும்(17) நேற்று டூவீலரில் சேலம் வந்தனர். பிளஸ் 1 படிக்கும் மணிகண்டன், வண்டியை ஓட்டிய நிலையில், தாய் ஈஸ்வரி பின்னால் அமர்ந்திருந்தார். பகல் 12.30மணியளவில் டூவீலர் சீலநாயக்கன்பட்டி மேம்பாலத்தில் இருந்து நாமக்கல் சர்வீஸ் ரோடு அருகே இறங்கியது. அப்போது அவ்வழியாக கர்நாடகாவில் இருந்து புதுக்கோட்டை செல்லும் லாரி ஒன்று எதிர்பாராத வகையில் டூவீலர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த ஈஸ்வரியை லாரி நசுக்கியது. இதில் மகன் கண்முன்னே தாய் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து லாரி டிரைவரான தொட்டியத்தை சேர்ந்த வடிவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post மகன் கண்முன்னே தாய் பலி appeared first on Dinakaran.

Tags : Salem ,Subramani ,Salem Jalakandapuram Kamarajar Nagar ,Ishwari ,Panamarathupatti ,Manikandan ,
× RELATED சிவகங்கையில் மகனை கொன்ற தந்தை உடல்நலக் குறைவால் உயிரிழப்பு..!!