×

அன்புமணி மரியாதை

சேலம், செப்.12: தீண்டாமையை ஒழிக்க வேண்டும், சமூகங்களுக்குள் இணக்கம் வேண்டும் என்பதற்காக தமது வாழ்நாள் முழுவதும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் 67ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சேலத்தில் அவரது படத்திற்கு பாமக தலைவர் அன்புமணி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில், அருள் எம்எல்ஏ, மாவட்ட தலைவர் கதிர் ராஜரத்தினம், மாநில பசுமை தாயக இணை செயலாளர் சத்ரிய சேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரேவதி ராஜசேகரன், மாவட்ட வியாபாரிகள் சங்க தலைவர் மதுரை வீரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜயகுமார், வடக்கு மாவட்ட செயலாளர் நாராயணன் மற்றும் வீரபாண்டி வேல்முருகன், மல்லசமுத்திரம் சுரேஷ், பாரதி, ஆதிமுத்து, கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அன்புமணி மரியாதை appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Salem ,Bamaka ,President ,Anbumani Malarthuvi ,Immanuel Sekaranar ,Dinakaran ,
× RELATED நடிகர் ரஜினிகாந்த் விரைவாக குணமடைய அன்புமணி வாழ்த்து!!