எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜவுக்கு வந்துள்ள விஜயதரணிக்கு பதவி கொடுத்திருக்க வேண்டும். அதில் தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் அவர் வருத்தப்பட வேண்டாம். வரும் காலத்தில் அவருக்கு உரிய பதவி கொடுக்கப்படும். கட்சியில் எனக்கும் பதவி இல்லை. அதிமுகவில் பல உயர்ந்த பதவிகளில் இருந்து விட்டு பாஜவுக்கு வந்தேன். பின்னர் மாநில துணைத்தலைவர் பதவி கொடுத்தார்கள். தற்போது சட்டமன்ற குழு தலைவராக மட்டும் இருக்கிறேன். அதிமுக, பாஜ இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சிதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post கட்சியில் எனக்கும் பதவி இல்லை பாஜ – அதிமுக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி: நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ ஏக்கம் appeared first on Dinakaran.