குடும்ப நல நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, அப்பெண்ணின் கணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன், முஸ்லிம் திருமண முறிவு சட்டத்தில் விவாகரத்து வழக்கு முடியும் வரை ஜீவனாம்சம் வழங்குவதற்கு உரிய பிரிவுகள் இல்லை என்றாலும், அரசியலமைப்பு அளித்துள்ள உரிமையின் அடிப்படையில் மனைவி மற்றும் குழந்தைக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்ற ஊட்டி குடும்பநல நீதிமன்றத்தின் உத்தரவு சரிதான் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The post முஸ்லிம் திருமண முறிவு சட்டத்தில் விவாகரத்து வழக்கு முடியும் வரை ஜீவனாம்சம் வழங்கலாம் :சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!! appeared first on Dinakaran.