இந்த வழக்கில் கொலையான ரேணுகா சாமி என்பவர் தர்ஷனின் பெண் தோழி பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பியதாகவும். அதை கண்டிப்பதற்காக தர்ஷன் அவரது ரசிகரை அழைத்து வந்து கண்டித்த போது எதிர்பாராத விதமாக உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இது தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகை திட்டமிட்ட கொலை என்ற அடிப்படையில் நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது. தர்ஷன் ரேணுகா சாமியை சித்திர துர்காவிலிருந்து அழைத்துவர முற்பட்டது தொடங்கி அதன் பின்னர் அவரை பெங்களூர் அழைத்து வந்து பண்ணை வீட்டில் வைத்து சித்திரவதை செய்தது உட்பட அவர் இறந்த பிறகு அவரது கொலை விவகாரத்தை மறைப்பதற்காக வேறு நபர்களை கொலை செய்ததாக ஒப்புக்கொள்ள வைத்தது உட்பட பல்வேறு வகையில் தர்ஷன் நேரடியாக இடம்பெற்றிருப்பது குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் தற்போது வரை இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக தர்ஷன் இருந்து வருகிறார். பவித்ரா கவுடாவின் பெயர் இந்த குற்றப்பத்திரிகையில் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேணுகாசாமியை அழைத்து வரவைத்தது கொலை செய்தது, கொலையை மறைக்க முயன்றது, சாட்சி ஆதாரங்களை கலைக்க முயன்றது என அனைத்து வகையிலும் தர்ஷன் பெயர் நேரடியாக இடம் பெற்றிருப்பதால் அவர் முதல் குற்றவாளியாக உள்ளார். மொத்தம் 3991 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையானது இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த குற்றப்பத்திரிகையானது 731 சாட்சி ஆதாரங்களின் அடிப்படையில் 7 தொகுப்புகள் உள்பட 10 தொகுப்புகளாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு 24வது ஏ.சி.எம்மம் நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். வரும் செப்டம்பர் 9ம் தேதியுடன் தர்ஷன் உட்பட 17 பேரின் நீதிமன்ற காவலன் நிறைவடைய உள்ள நிலையில், தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், பல இடங்களில் கொலைக்கு ஆதாரமாக பல்வேறு சம்பவங்களில் தர்ஷன் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்க வாய்ப்பு உள்ளது. 231 சாட்சிகளில் 61பேர் மனித சாட்சிகளாக இடம்பெற்றுள்ளனர். இந்த சாட்சிகள் என்பது சித்திர துர்காவிலிருந்து ரேணுகா சாமி அழைத்து வந்ததை பார்த்தது, கொலை மறைத்த பின்னர் பல்வேறு தரப்பினர்களை தொடர்பு கொண்டு சாட்சிகளையும், ஆதாரங்களையும் அழிக்க முயற்சித்தது, பண பரிமாற்றம் உள்ளிட்ட சம்பவங்கள் 61 நபர்களிடம் சாட்சிகளாக இடம்பெற்றுள்ளது. இது தவிர தொழில்நுட்ப சாட்சிகளும் ஆதாரங்களும் இந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
The post தோழியை கிண்டல் செய்த புகாரில் ரசிகரை கொலை செய்த வழக்கு: கன்னட நடிகர் தர்ஷன் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு appeared first on Dinakaran.