சிங்கப்பூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் வாட்டர் லூ தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கடந்த 3ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. நாதஸ்வர மங்கள வாத்தியங்கள் முழங்க புனித குடங்கள் புறப்பட்டு கோயிலை அடைந்திட காலை 9.15 மணிக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தகவல் தொடர்பு மற்றும் வர்த்தக தொழில்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கடந்த 7 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்பட்ட இவ்வாலயம் இன்று புதுப்பொலிவுடன் திகழ்கிறது. சுவரோவியங்கள் கண்ணைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளன. பக்தர்களுக்கு சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் ஸ்ரீருக்மணி சமேத கிருஷ்ணனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

× RELATED துபாயில் தமிழக எப்.எம்...