திருத்தணியில் அதிமுக சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா

 

திருத்தணி, செப். 2: திருத்தணி நகர அதிமுக சார்பில், புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  திருத்தணி நகர அதிமுக சார்பில் புதிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நகர செயலாளர் டி.சவுந்தர்ராஜன் தலைமையில் காந்தி ரோடு, முருகப்பா நகர், பெரிய தெரு, ஜோதி நகர், பழைய பஜார் தெரு, பெரியார் நகர், எம்ஜிஆர் நகர், சித்தூர் சாலை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளர் பி.வி.ரமணா, மாநில அமைப்பு செயலாளர் திருத்தணி கோ.அரி ஆகியோர் கலந்துகொண்டு அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி படத்துடன் கூடிய உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், முன்னாள் ஆவின் பெருந்தலைவர் ஜெ.த.கவிச்சந்திரன், முன்னாள் நகர அவைத்தலைவர் வி.குப்புசாமி, நகர பொருளாளர் சுந்தரபாண்டி, நகர இளைஞரணி செயலாளர் கேபிள் சுரேஷ், வழக்கறிஞர் தியாகராஜன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

The post திருத்தணியில் அதிமுக சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா appeared first on Dinakaran.

Related Stories: