இதேபோல் திருவள்ளூர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் தலைமையில் பறக்கும் படையினரும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தி செல்வதற்கு ரேஷன் அரிசி மூட்டைகள் தயார்நிலையில் வைத்திருப்பதாக நேற்று மாலை பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் ஜவகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து வட்ட வழங்கல் அலுவலர் ஜவகர், பறக்கும் படை துணை தாசில்தார் சரவணன் தலைமையில் ஊழியர்கள் பொன்னேரி ரயில் நிலையத்துக்கு சென்று நடைமேடை பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்குள்ள நடைமேடை பகுதியில், ஆந்திராவுக்கு ரயில் மூலம் கடத்தி செல்வதற்கு தயார்நிலையில் கட்டி வைத்திருந்த 1440 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பொன்னேரி அருகே பஞ்செட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரயில் மூலம் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி செல்லும் நபர்கள் யார், யார், அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் ஊழியர்கள் யார் என்று பறக்கும் படையினர் மற்றும் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
The post பொன்னேரி ரயில் நிலையத்தில் 1440 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: பறக்கும்படை அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.