நாகர்கோவில்: சகோதரரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில் சசிகுமார் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2011-ல் முள்ளங்கிவிளையைச் சேர்ந்த ஜோஸ் என்பவரது மனைவியை காரில் கடத்தி பலாத்காரம் செய்து கொன்றதாக வழக்கு தொடரப்பட்டது.